மும்பை மார்ச், 21
அதானி குழுமத்தின் பங்குகள் ஜனவரி இறுதியில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை விற்று வெளியேற்றினார். இந்நிலையில் எல்ஐசி தலைவர் குமார் பேட்டி ஒன்றில், அதானி குழுமத்தில் உள்ள எல்ஐசி பங்குகள் கடலில் ஒரு துளி போன்றவை. இதனால் அதைப்பற்றி பங்குதாரர்கள் மற்றும் பாலிசிதாரர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் ஒரு சதவீதம் கூட ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.