சென்னை மார்ச், 20
அயோத்தி படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க சங்கிலி பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான போட்டோவை மந்திரமூர்த்தி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பட குழுவினர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடும் போட்டோக்களும் உள்ளன. மார்ச் மூன்றாம் தேதி வெளியான அயோத்தி படம் 100க்கும் மேற்பட்ட திரையரங்குளில் ஓடி வருகிறது.