சென்னை மார்ச், 17
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவு திட்டத்தில் தானும் பயன்பெறுவதாக அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அவர் முதல்வரின் காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைகின்றனர். பிற மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்கையில் நானும் மாணவர்களுடன் தான் காலை உணவு எடுத்துக் கொள்கிறேன் அதிகம் பயன்பெறுவதில் நானும் ஒருவன் என்றார்.