ராமநாதபுரம் மார்ச், 17
ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் மூலம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார்.