சென்னை பிப், 4
பூஸ்டர் தடுப்பூசியாக கோவாக்சின் பாதுகாப்பானது என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்திக் கொண்டால் அதன் செயல் திறன் 71% உள்ளது. இதனால் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடிப்பது ஐ சி எம் ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என கூறினார்.