சென்னை பிப், 4
சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று செயல்படுகின்றன. அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் இயங்குவது குறித்து அதிகாரி பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.