தேனி பிப், 2
தேனி அருகே அல்லிநகரத்தில் தனியாருக்கு சொந்தமான டவர் உள்ளது. இந்த டவர் அலுவலகத்தில் வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலக பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் எட்டடி உயரம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று இந்த அலுவலகத்தில் புகுந்துள்ளது இதனை அறிந்த அலுவலக பணியாளர்கள் உடனடியாக பாம்பு பிடி வீரர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பு பிடி வீரர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலுவலகத்தில் பதுங்கி இருந்த எட்டடி நீளம் உள்ள சாரை பாம்பினை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.