தேனி ஜன, 31
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இந்த பரிசோதனையினை கம்பம் ரோகன் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனை முகாமினை இராயப்பன்பட்டி ஊராட்சி தலைவர் அரோக்கியசாமி நேரில் சென்று பார்வையிட்டர்
இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பரிசோதனை செய்து பயன் பெற்றனர்.