ஈரோடு பிப், 2
கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு முன்போ அல்லது நேரம் தாழ்த்தியோ வந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.