வேலூர் பிப், 2
தமிழக மாணவர்கள் உயர்கல்வியையும் தாண்டி ஆராய்ச்சி படிப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வேலூர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட மாடல் என்றால் அனைத்து துறையின் வளர்ச்சி அனைத்து மாவட்ட வளர்ச்சி அனைத்து சமூகத்தின் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி நடக்கிறது. அனைவரும் படியுங்கள் தமிழ்நாட்டை வளர்த்திடுங்கள் என்றார்.