வேலூர் பிப், 1
‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் சட்டம் ஒழுங்கு குறித்த நேரடியாக கள ஆய்வில் ஈடுபட உள்ளார். அதன்படி முதல் கட்டமாக இன்று அவர் வேலூர் மாவட்டம் செல்கிறார். பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் செல்லும் அவர் அங்கு பிப்ரவரி 1, 2 ல் தங்கி கள ஆய்வில் ஈடுபட உள்ளார்.