ஈரோடு பிப், 1
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை இபிஎஸ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நேற்று பேட்டியின் போது இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என்று கூறியிருந்தார். அந்த செய்தி வேட்பாளர் அறிவிப்பு தான் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னவன், கேசி பழனிசாமி ஆகிய இருவரில் ஒருவர் தான் வேட்பாளர் என கூறப்படுகிறது.