புதுடெல்லி ஜன, 30
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடைபெறும்.