ஜம்மு காஷ்மீர் ஜன, 30
ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2022 செப்டம்பர் 7ல் தமிழகத்தில் இந்த பயணத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். இன்று அங்கிருக்கும் ஸ்ரீ நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றி பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த நிறைவு விழாவில் 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.