புதுடெல்லி ஜன, 28
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சமாளிக்க கூடிய வகையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார். இது பற்றி அவர் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மிகவும் வலுவாக உள்ளது. அத்துடன் தாயகத்துக்கு பணம் அனுப்புவது உள்ளிட்டவையும் நன்றாகவே உள்ளது. உலக வணிக தேவைகள் குறைவால் பாதிப்புக்கு உள்ளாகும் பற்றாக்குறையை சமாளிக்க இவை நமக்கு நன்கு உதவும் என்றார்.