புதுச்சேரி ஜன, 27
தெலுங்கானாவின் ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே என்னை எதிர்க்கின்றனர். இது பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை அவமதிப்பவர்கள் குறித்து நான் புகார் அளிக்கலாம். ஆனால் எனக்கு கெடுதல் செய்பவருக்கு நான் கெடுதல் செய்ய மாட்டேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன் என்றார்.