புதுடெல்லி ஜன, 29
புதுடெல்லியில் என்சிசி மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி என்சிசி ₹75 நாணயத்தை வெளியிட்டார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட என்சிசி மாணவர்கள் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் பேரணி நடத்தினர். இதை பிரதமர் மோடி கண்டுகளித்தார். அப்போது என்சிசி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு தபால் தலையும் சிறப்பு ₹75 நாணயமும் வெளியிடப்பட்டது.