ஈரோடு ஜன, 28
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27 ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31 ம்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கூட்டணி கட்சியான த.மா.கா.வும் கலந்து கொண்டது.