ஈரோடு ஜன, 24
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கொரோனா கால வழிகாட்டுதல்கள் தேவைபடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்கு சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் இதனால் வாக்கு சாவடிகள் தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கை குறையும் என தெரிவித்துள்ளார்.