Spread the love

பெங்களூரு ஜன, 28

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க. உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார்கள். பிரதமர் மோடி இந்த மாதம் 2 முறை வந்து சென்றார். அமித் ஷாவும் ஒருமுறை பெங்களூரு, மண்டியாவுக்கு வருகை தந்தார்.

இந்நிலையில் அவர் 2-வது முறையாக நேற்று கர்நாடகம் வந்துள்ளார். ஜனசங்கல்ப யாத்திரை குந்துகோலில் நடைபெறும் பா.ஜ.க.வின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் குந்துகோல் வார்டு பகுதிகளுக்குச் சென்று, சுவர் விளம்பர பணியை அவர் தொடங்கி வைக்கிறார். குந்துகோலில் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய அளவில் ‘ரோடு ஷோ’வில் கலந்து கொள்கிறார். இதற்கு தேவையான ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் செய்துள்ளனர். அதன் பிறகு பெலகாவி மாவட்டம் கித்தூரில் நடைபெறும் ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தக் கூட்டங்களில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *