சென்னை ஜன, 26
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நல பாதிப்பால் இரண்டு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்து வருவதாகவும், மூன்று நாட்களுக்கு பின் வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.