திருப்பூர் ஜன, 27
நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. சரியாக காலை 8.05 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வினீத் தேசியகொடி ஏற்றினார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து திறந்த ஜீப்பில் காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தி வெள்ளை புறா பறக்க விடப்பட்டது.
பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 71 காவல் துறையினருக்கும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 86 காவலர்களுக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
அதேபோல் தீயணைப்பு துறை, மருத்துவ துறை, வருவாய் துறை, ஊராட்சி துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 263 அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, வருவாய்த்துறை, மாவட்ட முன்னேசடி வங்கி, கூட்டுறவு நலச்சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து 7 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ. மாணவியருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷேசாங்சாய், துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகர துணை ஆணையர்கள் அபிஷேக் குப்தா, வனிதா, டி.ஆர்.ஓ. ஜெய்பீம், முதன்மைக் கல்வி அலுவலர் திவளர்செல்வி மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள். மாணவ. மாணவியர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் குருசாமி மயில்சாமி ஜெயராம் ஆகிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது
மேலும் குடியரசு தின விழா நடைபெற்ற சக்கண்ணா கல்லூரி வளாகத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டடிருந்தது.
A.மருதமுத்து.
நிருபர்.
திருப்பூர்.