புதுடெல்லி ஜன, 24
நாடு முழுவதும் ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று தொடங்குகிறது. 290 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை எழுத 8.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து நாளை ஜனவரி 29, 30, 31 பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.