ஈரோடு ஜன, 19
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 இல் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணி குழுவை பாஜக அமைந்துள்ளது. அந்த வகையில் இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.