தேனி ஜன, 19
தேனி விசைத்தறி தொழிலாளர்கள் 14 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது. தொழிலாளர்களுக்கு 14% ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.