தேனி ஜன, 18
பிப்ரவரி 19 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம் கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை-போடி (திங்கள், புதன், வெள்ளி) மறுமார்க்கமாக போடி-சென்னை சென்ட்ரல் (ஞாயிறு, செவ்வாய், வியாழன்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.