புதுடெல்லி ஜன, 19
டெல்லியில் அமித்ஷாவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் ஆளுநர் சர்ச்சை குறித்து பல்வேறு விஷயங்களை அமித்ஷா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு விஷயங்களை அண்ணாமலை அவரிடம் தெரிவித்துள்ளார்