புதுடெல்லி ஜன, 19
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் மோதினர். இதில் டென்மார்க் வீரரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். பி.வி சிந்துவும் முதல் சுற்றிலையே தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்திய வீரர்கள் தோல்வியடைந்து வருவது ரசிகர்களுக்கு கவலையை அளிக்கிறது.