சென்னை ஜன, 19
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பணியின் தாக்கம் அதிகரித்து குளிர் காற்று கடுமையாக இருந்தது. மார்கழி முடிந்து தை மாதம் பிறந்துள்ளதால் குளிர் படிப்படியாக குறையும். இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.