சென்னை ஜன, 20
ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் விரும்புவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.