சென்னை ஜன, 19
தேசிய ஓய்வூதிய முறை ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 28ம் தேதி நான்காவது சனி, 29ம் தேதி ஞாயிறு 30, 31 என நான்கு நாட்கள் வங்கி இயங்காது. இதனால் மக்கள் முன்னதாக வங்கி வேலைகளை முடிக்கவும், கையில் பணம் எடுத்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.