சென்னை ஜன, 18
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ், விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்தார். இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்தார்.