கிருஷ்ணகிரி ஜன, 18
கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மதியம், 3 மணிக்கு மாடுகளை ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சாலையில் ஓடவிட்டனர். எருதுவிடுவதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர். ஆனால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் எதுவும் அமைக்காததால், மாடுகள் பல இடங்களில் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர்.
இதே போல், பழையபேட்டை மேல்தெருவில், 50-க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனர். ஆனால் பாதுகாப்பிற்காக காவல் துறையினரும் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.