அமெரிக்கா ஜன, 16
அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலிபோர்னியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனமழையால் கலிபோர்னியா மக்கள் போராடி வருகின்றனர். அந்த மாநில மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்படும். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் 34 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.