புதுச்சேரி ஜன, 16
புதுச்சேரியின் யானம் பகுதி ஆந்திரா எல்லையில் உள்ளது. அதன் அருகே உள்ள ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஜியோர்ஜிபேட்டா கிராமத்தில் சேவல் சண்டை கோலாகலமாக நடைபெற்றது. 10 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஏனாம் பகுதி தெலுங்கானா, கர்நாடகா ஆந்திராவை சேர்ந்த சேவல்கள் வந்தன. ஒரு போட்டிக்கு பத்து லட்சம் வரை என மொத்தமாக 100 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டது.