மத்திய பிரதேசம் ஜன, 16
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முதல்வர் சாலை வழியாக புறப்பட்டு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.