கேரளா ஜன, 15
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண நேற்று இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே எரிமேலி பகுதியில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைக்கு செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால் எருமேலியில் தமிழக பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை எடுத்து போக்குவரத்து நெரிசல் குறைந்த பின் அனுப்பி வைப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டனர்.