சென்னை ஜன, 15
சென்னையில் துக்ளக் இதழின் 53வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உலகளவில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2030 ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அந்த அளவு பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் மிகுதியாகி வருகிறது என்று கூறினார். மேலும் வளரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பெற்று வருகிறது என்றார்.