இமாச்சலப் பிரதேசம் ஜன, 14
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதியில் காலை 5:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஐந்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிற அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர்.