சென்னை ஜன, 14
தமிழகத்தின் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக இன்று விடுமுறை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே போல் தைப்பூசத் திருநாளான பிப்ரவரி 5ம் தேதியும் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.