சென்னை ஜன, 14
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கும் நான்கு நாட்கள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை முடித்து மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ம் தேதி கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.