சென்னை ஜன, 14
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார் கடந்த ஜனவரி 10ம் தேதி காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் சோர்வு காரணமாக அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முழுவதும் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.