சென்னை ஜன, 13
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இன்று மற்றும் நாளை டெல்லியில் தங்க உள்ளவர் சட்டப்பேரவை விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசு தலைவரிடம் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு அறிவுரை கூறும்படி முதலமைச்சர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் ஆளுநரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.