சென்னை ஜன, 16
நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனிஜிட்டல் முறையிலான சான்றிதழ்கள் வழங்கும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி உலகில் எங்கிருந்தாலும் தடுப்பூசிகளின் தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதற்கு தனியாக அட்டை கொடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.