சென்னை ஜன, 12
விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50,000 வது விவசாயிக்கு மின் இணைப்பு ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். 2022-23 எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் நிகழ் நிதியாண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.