சென்னை ஜன, 10
2022ல் தமிழகத்தில் 6,430 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2021 காட்டிலும் 6.5% என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2023 தொடங்கிய சில நாட்களிலேயே தற்போது வரை மாநிலம் முழுவதும் 350 பேர் டெங்குவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொசுவால் இந்த நோய் பரப்புவதால் அதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.