தூத்துக்குடி ஜன, 10
பொங்கல் பண்டிகை வருகின்ற 15 ம் தேதி கொண்டாடுவதையொட்டி, தற்போது வீட்டுக்கு முன்பு வண்ண, வண்ண கோலங்கள் இட்டு தைப்பொங்கலை முன்னதாகவே வரவேற்று வருகின்றனர்.
இதையொட்டி சுற்றுபுறகிராமங்களிலும், தெருக்களிலும் கலர்கோலப்பொடி விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஒரு சின்ன பாக்கெட் ரூ.10 என கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களிலும் விற்கப்படுகிறது. அனைத்துதரப்பு மக்களும் பொங்கல் பண்டிகைக்காக கோலப் பொடிகளை வாங்கி தினந்தோறும் வீட்டில் வாசல்களில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அசத்தி வருகின்றனர்.