தூத்துக்குடி ஜன, 6
கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். ராணுவ வீரர் சங்க தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்புலட்சுமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், சங்க செயலாளர் நிறைபாண்டிசாமி, பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது ஆட்சியர் செந்தில் ராஜ் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10,12, வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கலெக்டர் செந்தில்ராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.