Spread the love

தூத்துக்குடி ஜன, 16

தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23 ம் தேதி முதல் நடந்து வருகிறது. கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி வருகிற 29 ம்தேதி வரை நடக்கிறது.

மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்றனர். துபாயில் உள்ள அல்அராபா லோட்டஸ், ரிப்பன் பில்டிங்க் ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. 3டி செல்பி புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. ஆதிவாசிகள் வாழ்க்கை முறை, இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, பாண்டா கரடி, வரிக்குதிரை, மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும வகையில் உள்ளது.

மேலும் பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான நீச்சல் குளம், பொருட்காட்சி திடலை சுற்றி வரும் ரெயில், தொங்கும் பாலம், ராட்டினம் போன்ற பொழுது போக்கு விளையாட்டுகளும், டெல்லி அப்பளம், வாழைத்தண்டு சூப், ஜிகர்தண்டா போன்ற சுவையான திண்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக ரூ.70 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம். பொருட்காட்சியை பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாசை கொண்டு வந்து மாணவர்கள் பொருட் காட்சியை பார்வையிடலாம் என பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *