வேலூர் ஜன, 8
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பா ளர்களாக ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்.